பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ‘தல, தளபதி’ டயலாக்கை ரொம்பவே பாப்புலர் ஆக்கினாரு சந்தானம். இந்த காலத்து ரசிகர்கள் இவங்க இரண்டு பேருக்குத்தான் அதிகம்கறத இயக்குனர் கே.வி.ஆனந்தும் புரிஞ்சி வச்சிருக்காரா, இல்ல அடுத்த படத்துக்கு அச்சாணி போடறாராங்கறது போகப் போகத்தான் தெரியும்.
விஷயம் என்னன்னா, மாற்றான் படத்துல ஒரு காட்சியில ‘இரட்டை’ சூர்யாவும் படத்துக்குப் போறாங்க. அங்க தியேட்டர்ல விஜய் நடிச்ச நண்பனும், அஜித் நடிச்ச மங்காத்தாவும் ஓடிக்கிட்டிருக்கு.
இரண்டு சூர்யால ஒரு சூர்யா விஜய் ரசிகர்ன்றதால நண்பன் படத்துக்குப் போகணும்னு சொல்றாரு, இன்னொரு சூர்யா அஜித் ரசிகர்ன்றதால மங்காத்தா படத்துக்குப் போகணும்னு சொல்றாரு, இப்படி ஒரு காட்சிய வச்சி இரண்டு ரசிகர்களையும் சூர்யா நடிக்கிற படத்துக்கு வர்ற வைக்கிற சூட்சுமத்தை நல்லாவே புரிஞ்சி வச்சிருக்காரு இயக்குனர் கே.வி.ஆனந்த்.