அட்டகத்தி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. அறிமுகமாகும் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து விட்டால் ஹீரோயின்களுக்கு அதிர்ஷ்டம்தான். தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
இப்படி ஒரு வாய்ப்பு நந்திதாவுக்கும் கிடைத்திருக்கிறது, ஆனால், அதில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்து. தனுஷ் ஜோடியாக இருக்கும் என ஆசைப்பட்டார், ஆனால் தனுஷ் தயாரிக்க இருக்கும் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறார்.
இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்கப் போகும் ‘எதிர் நீச்சல்’ படத்தைத்தான் தனுஷ் தயாரிக்கப் போகிறார். நாயகனாக சிவ கார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாகத்தான் நடிக்கப் போகிறார் நந்திதா.
இந்த படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஆர்.வெங்கடேசன் இயக்கும் ‘நளனும் நந்தினியும் படத்தில் நடிக்க இருக்கிறார்.