ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் விஜய், சத்யராஜ் இருவரும் நடித்திருந்தனர். கல்லூரி முதல்வராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அவருடைய மகளை காதலிக்கும் மாணவனா விஜய் நடித்திருந்தார். இவர்களிருவரின் நடிப்புக்கு அப்டத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது, மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். ‘தாண்டவம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய் இயக்கப் போகும் படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஏற்கெனவே நாசர், சந்தானம் ஆகிய இயக்குனர் விஜய்யின் ஆஸ்தான நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மீண்டும் ஒரு ஏட்டிக்குப் போட்டியான நடிப்பை இருவரிடமிருந்து ரசிகர்கள் தாராளமாக எதிர்பார்க்கலாம்.