சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் படம் ‘அமைதிப்படை பார்ட் – 2 ‘ -”நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ”.
1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் அமைதிப்படை. நடிகர் சத்யராஜின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிய படம் இது.
இயக்குனர் மணிவண்ணனைப் பார்க்கும் ரசிகர்களும் சரி, அபிமானிகளும் ”சார் அமைதிப்படை மாதிரி ஒரு படம் கொடுங்க” என்று கேட்டதன் விளைவு.. இந்த அமைதிப்படை இரண்டாம் பாகம்.
இந்தப் படத்துக்கு ‘அமைதிப்படை பார்ட் – 2 ‘- ”நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ” என்று தலைப்பிட்டுள்ளனர்.
பழைய அமைதிப்படையை போன்றே அதே நூறு சதவீத லொள்ளோடும், ஜொள்ளோடும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவை மணிவண்ணனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய டி. சங்கர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, சண்டைப் பயிற்சியை சுப்ரீம் சுந்தர் மேற்கொள்ள ஒரே ஷெட்யூலில் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க உள்ளனர்.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், கே. சுரேஷ் இணைந்து தயாரிக்க பரபரவென தயாராகிறது ”நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ”.