முகமூடி படத்தையடுத்து கிரிக்கெட் என்ற படத்தை இயக்குவதோடு, அதில் ஹீரோவாகவும் நடிப்பதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் முகமூடி.
அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் மிஷ்கின். விறுவிறுப்பான ஆக்ஷனும் காதலும் கூடிய திரைக்கதையை இந்தப் படத்துக்காக உருவாக்கியுள்ளார்.
இதற்கிடையில், கிரிக்கெட் என்ற படத்தை அவர் இயக்கி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது,
“நான் நடிக்கப்போவதாகவும், தயாரிக்கப்போவதாகவும் பரவும் செய்தி தவறு. எனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை. அதை எப்போது தேவையோ அப்போது செய்வேன். இப்போதைக்கு கதை எழுதுவதில் மட்டுமே எனது கவனம் உள்ளது.
அடுத்து இயக்கும் படத்தில் பிரபலமான ஹீரோ நடிக்கலாம். தவறான அபிப்பிராயங்கள் பரவுவதைத் தடுக்கவே இந்த சிறிய விளக்கம். மற்றபடி அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.