1984ல் இராம. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த ‘நன்றி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன். ஏறக்குறைய 30 வருடங்களாக நாயகனாக நடித்து வருகிறார். தற்போது ‘வனயுத்தம்’ படத்தில் நடித்து வருகிறார்.
பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் கூட. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்த ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் இன்னும் அதிகமான பெயரைப் பெற்றவர்.
இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா, கல்லூரியில் படித்து வருகிறார். பூபதி பாண்டியன் இயக்கத்தில், விஷால் நாயகனாக நடிக்க இருக்கும் ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
விஷால், அர்ஜுனிடம் சில படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், கேட்டதும் அர்ஜுனும் அவருடைய மகளை அறிமுகப்படுத்த சம்மதித்தாகக் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கி, ஏப்ரல் 14ம் தேதி வர இருக்கிறது ‘பட்டத்து யானை’.