தமிழ்த் திரையுலகின் பரபரப்பான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். விமர்சனத்துக்குரிய படங்களை எடுத்து திறமையான இயக்குனர்களில் ஒருவர் என பேசப்பட்டு வருபவர்.
தற்போது, படத் தயாரிப்பிலும் இறங்க இருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் ஒரு படமல்ல, ஏழு படங்கள்.
இதற்காக ‘ஓம் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திக்கிறார். இதன் மூலம் திறமையான இளைஞர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அறிவித்த சில மணி நேரங்களிலேயே 500க்கும் மேற்பட்ட ‘மெயில்கள்’ வந்துள்ளதாக செல்வராகவன் ‘ட்விட்டரில்’ தெரிவித்துள்ளார்.
ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். மெயில் ஐடி. aumproduction@gmail.com.