சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா, ராமராஜன் நடித்த பாட்டுக்கு நான் அடிமை, டி. ராஜேந்தரின் ஒரு வசந்த கீதம் ஆகிய வெற்றி படங்களை மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தவரும் கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா, கோவா, கோச்சடையான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவருமான சந்திரபிரகாஷ் ஜெயின் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை விஜய் நடிக்க விஜய் இயக்கத்தில் தயாரிக்கிறார்.
நண்பன், துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் இது.
கிரீடம், பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள் , தாண்டவம் ஆகிய தொடர் வெற்றி படங்களுக்குப் பின் விஜய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
நடிகர் விஜயோடு இயக்குனர் விஜய் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன் முறை.
படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடிக்க முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகுகிறது இப்படம்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் நா.முத்துககுமார் பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி. கலை – ஆர்.கே. நாகு, இணை தயாரிப்பு – C.P. சுனில்ராஜ், C.P. தினேஷ்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் வெளிநாட்டில் துவங்கி தொடர்ந்து நடக்க இருக்கிறது.