தமிழ் ஹீரோக்களின் படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி அவர்களுக்கு அங்கும் ஒரு ‘மார்க்கெட்’ உருவாகி வருவது தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.
சூர்யா, கார்த்தி, விஷால், என இன்றைய இளம் ஹீரோக்களின் படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவதால் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் தொடர்ச்சியாக டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.
விஜய் நடித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியது. இப்போது ‘துப்பாக்கி’ திரைப்படமும் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.
தெலுங்கிலும் ‘துப்பாக்கி’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் தெலுங்கில் பேசி அங்குள்ள ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.