நீதானே என் பொன்வசந்தம் படத்திற்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் ‘மறந்தேன் மன்னித்தேன்’. இந்த படத்தில் அவருடைய பழைய பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார்.
1980ல் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜானி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆசைய காத்துல தூது விட்டு……’ என்ற சூப்பர் ஹிட் பாடலை ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளார்.
பழமையும் புதுமையும் கலந்த இந்த பாடல் இப்போதும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.