சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கம் மேற்பார்வை பார்த்து வந்தார்.
தற்போது, அந்த பணியை இயக்குனர் மாதேஷ் செய்யப் போவதாக அறிவிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டாருக்கும் , இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கும் ஏதோ பிரச்சனையா எனவும் பேச்சு வந்தது.
ஆனால், இது பற்றி இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கமளித்துள்ளார். “கோச்சடையான் படத்திற்கு எழுத்து, மற்றும் இயக்கம் மேற்பார்வையை இதுவரை செய்து வந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நான், சஞ்சய் தத்தை வைத்து இயக்கும் இந்திப் பட வேலைகளில் பிஸியாக இருப்பதால், தற்போது இயக்கம் மேற்பார்வை பணியை இயக்குனர் மாதேஷ் செய்கிறார். மாதேஷும் என்னுடைய நண்பர்தான். வேறு காரணம் எதுவுமில்லை”, என கூறியுள்ளார்.