‘ருத்ரமாதேவி’ அனுஷ்கா

மிழ், தெலுங்கில் அனைத்து ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்கத் துடிக்கும் நாயகி அனுஷ்கா. இவருடைய பல படங்கள் ஹிட் வரிசையில் சேரும் ராசியும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தமிழ் , தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அருந்ததி’  திரைப்படம் அனுஷ்காவின் திரையுலக வரலாற்றில் ஏறுமுகத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

தற்போது, மீண்டும் அம்மாதிரியான ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கப் போகிறார் அனுஷ்கா. ‘கில்லி ’ தெலுங்கு ஒரிஜனல் ‘ஒக்கடு’ படத்தையும் மற்றும் பல வெற்றிப் படங்களையும் இயக்கிய குணசேகர் இயக்கும் ‘ருத்ரமாதேவி’ தெலுங்குப் படத்தில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் அனுஷ்கா.

ஆந்திராவின் பெரும் பகுதியையும், தென்னிந்தியாவின் சில முக்கிய பகுதிகளையும் ஆண்ட ராணி ருத்ரமாதேவி பற்றிய படம் இது.

இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி வரலாற்றுப்  படமாக எடுக்க இருக்கிறார்கள். படத்தை குணசேகரே தயாரிக்கிறார்.

Read Previous

‘கோச்சடையான்’ – ரவிக்குமார் மாற்றம் ஏன் ?

Read Next

ஜெய்க்கு ஜோடியாக மும்பை நாயகி