தீபாவளி என்றாலே பட்டாசு, ஸ்வீட்ஸ், டிரஸ் என கொண்டாடும் நமக்கு அன்று திரைக்கு வரும் புதிய படங்களும் ஒரு கொண்டாட்டம்தான். மற்ற எந்த நாளிலும் வரும் திரைப்படங்களை விட தீபாவளி அன்று திரைக்கு வரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசுதான்.
இந்த ஆண்டு கேரளாவிலும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டப் போகிறது. காரணம் ‘துப்பாக்கி’ தான். விஜய் படங்களுக்கென்று அமோகமான ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் உண்டு. இதனால், இந்த தீபாவளிக்கு வெளிவரும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தை அங்கு ஏறக்குறைய 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியிட இருக்கிறார்கள்.
ஒரு தமிழ்த் திரைப்படம் கேரளாவில் முதல் முறையாக இவ்வளவு திரையரங்குகளில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள்.
அதே சமயம், விஜய் நடிக்கும் ஒரு திரைப்படம் தமிழில் வெளியாகும் அன்றே ஆந்திராவிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறையாகும்.
இந்த தீபாவளி விஜய்க்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என ‘மூன்று குழல்’ துப்பாக்கி தான்.