ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, மேன்டி தாகர், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. கார்த்தி, ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பை முடித்து விட்டு வந்ததால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் நாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற நீண்ட நாள் காத்திருப்புக்கு சென்ற வாரம்தான் பதில் கிடைத்தது. ரிச்சா நடிப்பதாக இருந்தார், அவருக்கு பதிலாக ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக ஒப்பந்தமானார். படத்துக்குப் படம் கார்த்தியும் புதுப்புது ஜோடியுடன் கலக்க ஆரம்பித்து விட்டார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100வது படமிது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று அடுத்த ஆண்டு துவக்கத்தில் ‘பிரியாணி’ வெளியாகலாம் எனத் தெரிகிறது.