‘பட்டத்து யானை’யில் சந்தானம்

 ‘தேவதையைக் கண்டேன், ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ ,‘ காதல் சொல்ல வந்தேன்’ படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கப் போகும் படம் ‘பட்டத்து யானை’.

விஷால், நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கலாம் என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சந்தானம் நடிப்பது உறுதியாகிவிட்டது என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

இந்த படத்தை தயாரிக்கவிருப்பது ‘நாடோடிகள்’ படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். தே.மு.தி.க.,  எம்.எல்.ஏ.வான இவர் சமீபத்தில்தான் முதல்வரைச் சந்தித்து வந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  எனவேதான் வடிவேலு ‘பட்டத்து யானை’யில் நடிக்க இருந்தது பேச்சோடு போய் விட்டதாகத் தெரிகிறது.

Read Previous

‘பிரியாணி’ சமையல் ஆரம்பம்

Read Next

தீபாவளி ரிலீஸ்