சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 13ம் தேதி முதல் 20ம் தேதி வர நடைபெற இருக்கிறது. 57 நாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
நிறைவு விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையினரின் ஆதரவோடு இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இந்த விழாவை நடத்துகிறார்கள். 2003ம் ஆண்டிலிருந்து இந்த திரைப்பட விழா நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், அரவான், ஆரோகணம், அட்டகத்தி, மெரீனா, மௌனகுரு, முப்பொழுதும் உன் கற்பனைகள், நான் ஈ, நீர்ப்பறவை, பீட்சா, சாட்டை, சுந்தரபாண்டியன், வழக்கு எண் 18/9 ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது.