ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கார்த்தி, பிரேம்ஜி இருவரும் நண்பர்கள். ஆம்பூரில் தயாராகும் பிரியாணி மீது அளவுக்கதிகமான ‘ருசி’ வைத்திருப்பவர்கள். ஒரு நாள் ஆம்பூருக்கு பிரியாணி சாப்பிடச் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அதன் பழி, அவர்கள் மீது விழுகிறது. அதிலிருந்து இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
இதை சரியான ‘மசாலா’ காரத்துடன் வெங்கட் பிரபு இயக்கி வருகிறாராம்.
‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ நாயகன் ராம்கி இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வழக்கமாக கார்த்தி, சந்தானம் காம்பினேஷனுக்கு தனி கலகலப்பு உண்டு. ஆனால் இந்த படத்தில் கார்த்தியுடன், வெங்கட் பிரபுவின் ‘ஆஸ்தான குடும்ப நடிகரான’ பிரேம்ஜி இணைந்திருக்கிறார் .
யுவன்ஷங்கர்ராஜாவின் 100வது படம் என்பதால் பாடல்களில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.