வெளிநாடுகளில் கலக்கும் ‘துப்பாக்கி’

     ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் மட்டும ஏறக்குறைய 5 கோடி ரூபாய் அளவிற்கு இந்த படத்திற்கு வசூல் கிடைத்துள்ளது.

இந்த வசூல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் மட்டும் வசூலான தொகை.

இங்கு மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் ‘துப்பாக்கி’யும் ஒன்றாக அமைந்துவிட்டது.

Read Previous

‘பிரியாணி’ த்ரில்லர் கதையா ?

Read Next

வெளிநாட்டில் தயாரான ‘அடுத்த கட்டம்’