இளம் இயக்குனர்கள் வெளியிடும் இசை

     ரெட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மதன் குமார் இயக்கும் படம் ‘யாருடா மகேஷ். கோபி சுந்தர் இசையில் நா.முத்துகுமார் பாடல்களை எழுதியிருக்கிறார். சுந்தீப், டிம்பிள், ஜெகன், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீடு நாளை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் இசையை ஆறு இளம் இயக்குனர்கள் வெளியிட இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அவரவர் முதல் படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்தவர்கள்.

‘ஈரம்’ பட இயக்குனர் அறிவழகன், ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, ‘நான்’ இயக்குனர் ஜீவா சங்கர், ‘அட்டகத்தி’ இயக்குனர் ரஞ்சித், ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ‘மௌன குரு’ இயக்குனர் சாந்த குமார், இவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள்.

‘இளைஞர்களுக்காக இளைஞர்களால்’ என எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘யாருடா மகேஷ்’ என்கிறார்கள் படக்குழுவினர். எனவேதான், ஆறு இளம் இயக்குனர்களை வைத்து இப்படத்தின் இசை வெளியீட்டை நடத்துகிறார்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர் 5000 விளம்பரப் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பாடகரானார் ‘கார்த்தி’

Read Next

‘கஜராஜு’வாக மாறும் ‘கும்கி’

Most Popular