மணிரத்னம் இயக்கத்தில் , ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், கௌதம், துளசி நடிக்கும் ‘கடல்’ படத்தின் இசை இன்று திடீரென வெளியிடப்படுகிறது.
முன்னதாக, இந்த படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 17ம் தேதிதான் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் முன்னதாகவே, இன்று இந்தப் படத்தின் இசை வெளியிடப்படுகிறது.
முதலில் அறிவித்து விட்டு, பின்னர் தள்ளி கூட இசை வெளியீட்டை நடத்துவார்கள், ஆனால் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே இந்த படத்தின் இசை வெளியீடு ஏன் ? என கேள்வி எழும்பியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள சூழ்நிலையில் இப்படத்தின் பாடல்களை இன்று வெளியிடுவது வேண்டுமென்றே ஒரு போட்டிக்கான சூழலாகவே தெரிகிறது என ரசிகர்கள் கருதுகிறார்கள்.