‘பெண்களுக்கான படம்’ – கௌதம் மேனன்

     மீபத்தில் வெளி வந்து  உலகமெங்கும் மிக தரமான படம் என எல்லோராலும் பாராட்டப்பட்ட ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ படம் பெண்களுக்கான படம் என இயக்குனர்  கௌதம் கூறினார் .

“ பொதுவாக என் படங்களுக்கு பரவலாக எல்லோருடைய பாராட்டும் கிடைக்கும்.  என்னுடைய 12 படங்களையும்  இரு பாலினரும்  ரசித்தாலும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலாக இருக்கும்.  ஆனால் இது வரை ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ படம் பார்த்து விட்டு என்னையும் என் குழுவினரையும் பாராட்டுவோர்  பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர் .

அது இப்படத்தின் கதாநாயகி  நித்யாவின் கதாபாத்திரத்தை  நான் படைக்கும் போதே வந்த உணர்வுதான் என்றாலும்  இந்த ஆதரவு என்னை மிகவும் உற்சாக மூட்டுகிறது .

பொதுவாக காதல்  படமென்றால் அது ஆண்களின்  கண்ணோட்டத்தை சார்ந்தே இருக்கும் ஆனால்  ‘ நீதானே பொன் வசந்தம் ‘ படம் ஆண் -பெண்  இருவரின் கண்ணோட்டத்தையும் சார்ந்த படமாக உள்ளதால் இது சாத்தியமானது ” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

‘கடல்’ இசை திடீர் வெளியீடு

Read Next

கும்கி – விமர்சனம்

Most Popular