தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு டிரென்ட் வந்து விடுவது வழக்கம். தற்போது கடல் சார்ந்த மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது வழக்கமாகி விட்டது.
அந்த வரிசையில் சேர்ந்துள்ள மற்றுமொரு திரைப்படம் ‘மறியான்’.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்பாலா இயக்கி வரும் படம். தனுஷ், ‘பூ’ படத்தில் நடித்த பார்வதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘வந்தே மாதரம்’ இசை வீடியே ஆல்பத்தைத உருவாக்கியவர்தான் பரத் பாலா.
தேசிய விருது மற்றும் ‘கொல வெறி’ பாடல்களுக்குப் பிறகு தனுஷை வைத்து பல நல்ல இயக்குனர்கள் படங்களை இயக்கி வருகிறார்கள்.
இந்த படத்தில் தேசிய விருது பெற்ற மற்றுமொரு நடிகர் சலீம் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பூ’ படத்திற்குப் பிறகு பார்வதி மீண்டும் நடிக்கும் தமிழ்ப் படம் இது.
படத்தின் முக்கியமான காட்சிகள் நமீபியாவில் படமாக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது.