‘நீதானே என் பொன்வசந்தம்’ யாருக்கு வசந்தமோ இல்லையோ, சமந்தாவின் திரையுலக வாழ்க்கைக்கு நல்ல வசந்தமாக அமைந்து விட்டது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்த இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பைப் பார்த்து இரு மொழி ஹீரோக்களுமே பாராட்டு மழையைப் பொழிய ஆரம்பித்து விட்டனர்.
‘நீதானே என் பொன்வசந்தம்….’ என படத்தில் ஜீவா மைக் பிடித்து பாட ஆரம்பித்ததும்..சமந்தா வெளிப்படுத்திய முகபாவத்தில் பலரும் வீழ்ந்து விட்டனர். கிளைமாக்ஸ் வரை சமந்தாவின் அற்புதமான நடிப்பு அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத் தந்து விட்டது.
தெலுங்கில் அடுத்து சமந்தா நடித்துள்ள ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி சேத்து’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தமிழில் அடுத்த படம் வர நீண்ட நாட்களாகும்..சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறது…
இப்ப பல ஹீரோக்கள் சமந்தாவை ஜோடியா நடிக்க வைக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க…
அது வரைக்கும் கொஞ்சம் காத்திருப்போம்…