‘ராவணன்’ படத்திற்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் இல்லாமல் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இயக்கும் படம் ‘கடல்’.
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வைரமுத்து, கார்க்கி எழுதிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டது.
கௌதம் கார்த்திக், துளசி, லட்சுமி மஞ்சு, அர்ஜுன், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் வெளியீடு அடுத்த வருடம் 2013, பிப்ரவரி 1ல் இருக்கலாம் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு பல பெரிய படங்கள் ஏமாற்றி விட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டில் வெளியாகும் படங்களுக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது…
விஸ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், பரதேசி, கடல் என 2013ன் ஆரம்பமே அமர்க்களமான படங்களுடன்தான் தமிழ்த் திரையுலகிற்கு ஆரம்பமாகிறது.
பார்ப்போம்…2013 எப்படி இருக்கப் போகிறது என்று….