கருணாஸ், அங்கனா ராவ், கோவை சரளா, சிங்கம் புலி நடிக்க மனோ இயக்கும் படம் ‘ரகள புரம்’.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இப்படத்தின் கதையும், காட்சியமைப்புகளும் வினியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு ‘ஆரோகணம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களை மொத்தமாக வாங்கிய ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ‘ரகள புரம்’ படத்தை மொத்தமாக வாங்கியுள்ளது.
விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
இந்த படத்திற்கு அடுத்து, கருணாஸ் ‘தப்பாட்டம்’ என்ற படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய ராம்நாத் இந்த படத்தை இயக்க உள்ளார்.