பொங்கலுக்கு வெளியாகும் படங்களிலேயே இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’.
விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால், ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குத்தான் ஜாக்பாட் என திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.
அதனால்தான் ஒரு நாள் முன்னதாக, இன்று படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
படம் பார்த்த நமது நண்பர் மூலமாக கேள்விப்பட்ட படத்தின் கதை இதுதான்.
‘‘வெளிநாட்டிலிருந்து ஒரு மகத்துவமான மருந்தை வில்லன் கடத்திக் கொண்டு வருகிறார். அதற்கான அனுமதியை முதல்வரிடமிருந்து பெற வேண்டும். ஆனால் முதல்வர் அனுமதிக்க மறுக்கிறார். இதனால், கோபமுறும் வில்லன், முதல்வர் மகளான அனுஷ்காவை, அடியாளான கார்த்தியை வைத்து கடத்துகிறார். அனுஷ்கா, கார்த்தியிடம் தான கடத்தப்பட்டதன் பின்னணியைக் கூற, ஹீரோவான கார்த்தி , அனுஷ்காவை எப்படி காப்பாத்தறாரு, வில்லனை என்ன பண்றாருங்கறதுதான் படத்தோட மீதி கதை.”
படத்தோட விமர்சனத்தை படிக்க நீங்கலாம் ரொம்ப ஆவலா இருப்பீங்கன்னு தெரியும்…நமக்கு படம் பார்க்க நாளைக்குதான் அழைப்பு.
அதுவரைக்கும், இந்த கதைச்சுருக்கத்தை மட்டும் பார்த்து படிச்சிடுங்க..
விமர்சனத்தை நாளைக்கு படிக்கலாம்.