11 ஆஸ்கர் விருதுகளுக்கு ‘லைப் ஆஃப் பை’ பரிந்துரை

life of piஇந்தியாவில், புதுச்சேரியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான ‘லைப் ஆப் பை’ 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய இந்த படத்தில் இந்திய நட்சத்திரங்களான சூரஜ் சர்மா, தபு, இர்பான் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டன.

இப்படத்தின் டிரைலர் கூட முதன் முதலில் சென்னையில்தான் வெளியிடப்பட்டது.

யான் மார்ட்டெல் எழுதி 2001ம் ஆண்டு வெளியான ‘லைப் ஆஃப் பை’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. படத்தின் நாயகனான பை, தனது 16வது வயதில் வட அமெரிக்காவுக்கு கப்பல் பயணம் மேற்கொள்கிறான். அப்போது அந்த கப்பல் பசிபிக் பெருங்கடலில் மூழ்குகிறது. அதிலிருந்து அவன் மீட்கப்பட்டு ஒரு மீட்பு படகில் ஒரு புலியுடன் 227 நாட்கள் வாழ்ந்ததே படத்தின் கதை.

சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜனல் பாடல் , சிறந்த எடிட்டிங், சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த ஒலிக் கலவை மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தொடக்கத்தில் ஒரு தலாட்டு பாடல் ஒலிக்கும். கர்நாட இசைப்பாடகியும், ‘மின்னலே’ திரைப்படத்தில் ‘வசீகரா….’என்ற சூப்பர் ஹிட் பாடலைப் பாடிய பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த தமிழ்ப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்த பாடல் மூலம் பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எடுக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் படம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 7 பிரிவுகளில் ஆஸ்கர் வென்றதும், ஏ.ஆர். ரகுமான் அதில் 2 விருதுகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

கேரளாவில் 102 தியேட்டர்களில் ‘அலெக்ஸ் பாண்டியன்’

Read Next

‘அலெக்ஸ் பாண்டியன்’ கதை இதுதான்…