‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் கேரளாவில் 102 தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது.
சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்தி நடித்த ஒரு திரைப்படம் கேரளாவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
மம்முட்டி, மோகன்லால், விஜய், சூர்யா படங்களுக்குப் பிறகு கார்த்தியும் இந்த பெருமையப் பெறுகிறார்.