விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்குவோம் – தியேட்டர் உரிமையாளர்கள்

    viswaroopam_00002‘விஸ்வரூபம்’ என்று எந்த நேரத்தில் கமல்ஹாசன் படத்திற்கு டைட்டில் வச்சாரோ இப்போது ரிலீஸ் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துக் கொண்டேயிருக்கிறது.

இப்போது தியேட்டர் உரிமையாளர்களுடனான பிரச்சனை  முடிவுக்கு வந்துள்ளது.

இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்தித்தார் கமல்ஹாசன்.

‘என் மீது அனைவரும் வைத்துள்ள அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டு என்னுடைய முடிவை எடுத்துள்ளேன். சிறு வயது முதலே என் மீது பாசம் வைத்துள்ள இவர்களால்தான் நான் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறேன்,” என உணர்ச்சி பொங்க கூறினார் கமல்ஹாசன்.

 இந்த உணர்ச்சி மிக்க சந்திப்பில் கமல்ஹாசனுக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கிய தியேட்டர் உரிமையாளர்கள், விஸ்வரூபம் படத்தை வெற்றிப் படமாக்குவோம் என்றனர்.

டிடிஎச் விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவெடுப்போம் என்றார் கமல்ஹாசன்.

கடந்த சில நாட்களாக சரியாக தூங்கவேயில்லை, இனிமேல்தான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

Read Previous

நடிகர் கார்த்திக்கு பெண் குழந்தை…

Read Next

மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா