தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.
இன்றைய தேதியில் சமந்தாதான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நேற்று வெளிவந்த ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு’ என்ற படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் மகேஷ் பாபுவுடன் ‘தூக்கடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்போது, ‘சீதம்மா….படமும் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டது.
ஆந்திராவில் நேற்று வெளியாக இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெர்டர்ச்சியான வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் என்ற பெருமையப் பெறுகிறார் சமந்தா.
அடுத்து, ஜுனியர் என்டிஆர், பவன் கல்யாண் படங்களில் நடிக்க இருக்கிறார்.