விஸ்வரூபம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னால் டிடிஎச்-ல் ஒளிபரப்பபாகும் என்று சொல்லப்பட்டு வந்தது.
அதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வந்தன. ஆனால் தியேட்டர் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து டிடிஎச் முன்பதிவும் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல் டிடிஎச் பிரச்சனை பற்றி இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்று சொன்னார்.
ஆனால், நாம் விசாரித்தவரையில் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்னால் டிடிஎச் ஒளிபரப்பு இருக்காது என்றே தெரிகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் படம் வெளியான 5 வாரங்கள் கழித்து ஒளிபரப்பிக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே, கமல்ஹாசனும் திரையரங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து டிடிஎச் ஒளிபரப்பை நிறுத்தி வைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.