‘கடல்’ வியாபாரம் – எங்களுக்கு தொடர்பில்லை – மெட்ராஸ் டாக்கீஸ்

kadal press meet_00021‘கடல்’ திரைப்பட வெளியீட்டால் நஷ்டம் அடைந்ததாகக் கூறப்பட்ட வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திடமிருந்து பத்திரிகைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

”கடல் திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு வெளியிட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ், மார்ச் மாதம் 2012லேயே ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இமேஜிங் லிட்., நிறுவனத்திற்கு விற்று விட்டது. இந்த பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை.  பட வெளியீடு தொடர்பாக ஜெமினி நிறுவனம் தவிர வேறு யாருடனும் தொடர்பு வைக்கவில்லை, ” என தெரிவித்துள்ளார்கள்.

Read Previous

பிரசாந்த் படம் இயக்கவில்லை – ராஜமௌலி

Read Next

வட இந்தியாவிலும் பாலாவின் ‘பரதேசி’

Most Popular