தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய படம்

aadukalam‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் அடுத்து ஒரு புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என கேரள நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் மலையாள நடிகரான ஃபஹத் பாசில் மற்றொரு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இரு வேறு மொழிகள் பேசும் நண்பர்களுக்கிடையேயான கதைதான் இந்த படம் எனத் தெரிகிறது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் தயாராக இருக்கிறது.

தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் மலையாளத்தில் நடித்த ‘காமத் அன்ட் காமத்’ படம் சமீபத்தில் வெளியானது. ஃபஹத் பாசில் மலையாளத்தில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர்.

‘ஆடுகளம்’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இன்னும் எந்த படமும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது-

Read Previous

‘மிர்ச்சி’ யை கொத்தப் போவது யாரு…

Read Next

விஜய்யின் ‘ஜில்லா’, யார் கட்டப் போறாங்க ‘கல்லா’

Most Popular