இந்த ‘மிர்ச்சி’ ஆந்திரா ‘மிர்ச்சி’. பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா, சத்யராஜ், நதியா நடிச்சி கடந்த வாரம் தெலுங்குல வெளியான மசாலா படம்தான் இந்த ‘மிர்ச்சி’.
இரண்டு குடும்பங்களுக்குள்ள இருக்கிற பகை, அந்த பகையை தீர்க்க வர்ற ஹீரோ, அப்புறம் காதல், அப்படிங்கற வழக்கமான கதையா இருந்தாலும் ஆந்திர மக்களுக்கு இந்த ‘மிர்ச்சி’ ரொம்பவே பிடிச்சி போச்சி.
வழக்கமா தமிழ், தெலுங்கு படங்களை இந்தியில ரீமேக் பண்ணி ஹிட் அடிச்சிட்டு வர்ற சல்மான் காலன் இந்த படத்தை சீக்கிரமே பார்க்கப் போறதா தெலுங்கு தேசத்துத் தகவல்.
அப்ப, நம்ம ஆட்களும் சும்மா இருப்பாங்களா…ஒரு ஹீரோ, இரண்டு ஹீரோயின், குடும்பம், பகை, தமிழ் சினிமாவுக்கும் ஏத்த சப்ஜெக்ட்தான…
தெலுங்கு ரீமேக்ல அதிகம் ஹிட் அடிச்ச நம்ம ‘ரீமேக்’ ராஜா தம்பி ‘ஜெயம் ரவி’க்காக வாங்கப் போறாரா, இல்ல இளைய தளபதி இன்னொரு ‘கில்லி’ ஹிட்டுக்கு வாங்கப் போறாரோ, பொறுத்திருந்து பார்ப்போம்…