சென்னை சிறுவன் ‘ 3 வயதில் 3 சாதனை ‘

kl-dheerajசென்னையைச் சேர்ந்த கல்யாண்குமார் – லீனா வந்தினி தம்பதியரின்  மூன்று வயது மகனான கே.எல். தீரஜ் , இந்த வயதிலேயே மூன்று இந்திய சாதனைகளை புரிந்திருக்கிறான்.

அவன் முதல் சாதனை புரிந்த போது வயது 2 மட்டுமே. 215 நாடுகளின் தேசியக் கொடியை 2 நிமிடம் 9 வினாடிகளுக்குள்,  சரியாகச் சொல்லி  அதிக தேசியக் கொடிகளை அடையாளப்படுத்திய இளம் வயது சாதனையாளன் என்ற ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2012’ல் இடம் பெற்றான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சாதனையை அவன் புரிந்தான்.

இந்த ஆண்டு கடந்த 7ம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மோகன் , திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோரது முன்னிலையில் மேலும் இரண்டு சாதனைகளைப் புரிந்தான்.

முதலாவது சாதனை, 83 கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தவர்களின் பெயர்களை அந்த கண்டுபிடிப்புக்களைப் பார்த்து 1 நிமிடத்திற்குள் சொல்லி, ” Most names of the Inventors recognised by looking at the Inventions in 1 minute” என்ற பட்டத்தை வென்றான்.

இரண்டாது சாதனை, World Map Puzzle ஐ 3 நிமிடங்கள் 20 வினாடிகளுக்குள் பொருத்திக் காட்டியது, என மேலும் இரண்டு சாதனைகள் புரிந்தான். இந்த தைனையை இதற்கு முன் லனோவைச் சேர்ந்த வியோம் அகுஜா 4 நிமிடம் 49 வினாடிகளில் செய்ததை தீரஜ் முறிடியத்துக் காட்டினான். இதன் மூலம் “Youngest to solve world map puzzle” என்ற பட்டத்தை வென்றான்.

இந்த சாதனை நிகழ்வை சென்னை , ராயப்பேட்டை ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

தீரஜ் மேலும் பல சாதனைகளை புரிய நாமும் வாழ்த்துவோம்…

Read Previous

மிஷ்கினின் ‘LONE WOLF’

Read Next

“Kadhal Cappuccino” இசை ஆல்பம் வெளியீடு

Most Popular