மிஷ்கினின் ‘LONE WOLF’

mysskin-lone-wolfபெயரைப் பார்த்ததும் மிஷ்கினின் அடுத்த படத்தின் தலைப்பு என எண்ணி விட வேண்டாம். இங்குதான் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடியாதே ?

மிஷ்கினின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான் இந்த ‘LONE WOLF ‘ .   இந் நிறுவனத்தின் மூலம் விரைவில் தனது அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார்.

இது குறித்து மிஷ்கின் கூறுகையில், ” என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய்.  அதன் குணாதிசயங்கள் மிகவும்விசித்திரமானவை, சுவாரசியமானவை. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாக திரியும், கூட்டமாகவே இரையை தாக்கும்என கேள்விபட்டுரிக்கிறோம்.

ஆனால் சில ஓநாய்கள் மட்டும் எந்த ஒரு கூட்டத்தோடும் சேராமல், தன்னந்தனியே கம்பீரமாகவாழும், அவற்றை LONE WOLF என கூறுவர். அந்த குணாதிசயங்களும், வாழ்வு முறையும்  என்னை கவர்ந்ததால் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு  LONE WOLF  PRODUCTIONS என்றபெயரை சூட்டினேன்.

விரைவில் தொடங்க உள்ள எனது அடுத்த படத்திலிருந்து,  இனி  எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய  நல்ல தரமான படங்கள் தர உள்ளேன்” என கூறினார்.

Read Previous

நார்வே திரைப்பட விழா.. குறும்படங்கள் போட்டி அறிவிப்பு..

Read Next

சென்னை சிறுவன் ‘ 3 வயதில் 3 சாதனை ‘