விக்ரமை வம்புக்கு இழுக்கும் தெலுங்கு ஹீரோ…

vikram-rana-dagubattiந்திர தேசத்தில் ஏற்பட்டுள்ள தமிழ் நடிகர் விக்ரம், தெலுங்கு நடிகர் ராணா இடையிலான புயல் இன்னும் தமிழக கரையைக் கடக்கவில்லை. நாம் ஆரம்பித்து வைப்போம்.

ராவண், டேவிட் படங்களின் மூலம் இந்தித் திரையுலகிற்கும் அறிமுகமானவர் விக்ரம்.  கடந்த வாரம் மும்பையிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தென்னிந்திய நடிகர்கள் ஹிந்தித் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லையே என்ற கேள்விக்கு பின் வருமாறு பதிலிளித்திருந்தார்.

”கமல்ஹாசன் நடித்த ‘ஏக் துஜே கேலியே (1981) அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து கமல் நடித்த ‘சாகர்’ (1985)  சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின் கமல் ஹிந்திப் படங்களில் நடிக்கவில்லை.

தென்னிந்தியாவில் இருக்கும் பெயரை அப்படியே விட்டு விட்டு வந்து விட முடியாது. அங்கு வருமானமும் அதிகம். ஆனால், இங்கு முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ஹீரோயின்களுக்கு அப்படியில்லை. அவர்களை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

ராணா டகுபதியைப் (தெலுங்கு ஹீரோ) பாருங்கள். தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானார், அதன் பின் ஹிந்திக்கு வந்தார். ஆனால், அவரால் தெலுங்கில் முன்னேற முடியவில்லை. இப்போது, அவர் தெலுங்கைப் பற்றி கவலைப்படவேயில்லை.

ஹிந்திப்படங்களில் நடிக்க வேண்டுமென்றால், அனைத்தையும் விட்டு விட்டு இங்கு வர வேண்டும். இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 145 கோடி ரூபாய் பட்ஜெட் படம் , அதை அப்படியே விட்டு விட முடியாது,” என   பதிலிளித்திருந்தார்.

விக்ரமின் இந்த கருத்தை தனக்கு எதிரான கருத்தாக புரிந்து கொண்டுள்ள ராணா டகுபதி பதிலுக்கு விக்ரமைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதில்,

”டியர் மிஸ்டர் விக்ரம், என்னைப் பற்றியும் என் வழியைப் பற்றியும்  நீங்கள் மீடியாக்களில் சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் தொழிலைப் பாருங்கள், அது சரியான பாதையில் முன்னேறவில்லை, ஏறக்குறைய 10 மாபெரும் தோல்விப் படங்களை கொடுத்திருக்கிறீர்கள்.

நான் இரண்டரை வருடங்களாக மட்டுமே நடிகராக இருக்கிறேன், ஆனால் நீங்களோ இருபத்தைந்து வருடங்களாக நடிகராக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையப் பாருங்கள், நான் என் வேலையைப் பார்க்கிறேன். நான் இன்னும் உங்களுடைய ஒரு சில படங்களின் மிகப் பெரும் ரசிகனாக  இருக்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் பேரன்தான் ராணா.  தெலுங்கில்  ‘லீடர்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் நயன்தாராவுடன் இவர் நடித்த படம் உட்பட சில படங்கள்  தோல்வியைத் தழுவின. தற்போது தமிழில் அஜித்துடன் ஒரு படத்திலும், தெலுங்கில் ‘பாகுபலி, ராணி ருத்ரமா தேவி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

ராணாவின் கருத்துக்கு விக்ரம் என்ன சொல்லப் போகிறார்….?

Read Previous

தனுஷ் படத்திற்கு புது ஹீரோயின்

Read Next

மோகன்லால் படம் இயக்கவிருக்கும் தமிழ் இயக்குனர்

Most Popular