மோகன்லால் படம் இயக்கவிருக்கும் தமிழ் இயக்குனர்

peruchazhiபிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் வைத்தியநாதன்.

தற்போது பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிக்கும் ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை ஆனந்த் கோவிந்தனுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

அடுத்ததாக, அருண் வைத்தியநாதன் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். ஒன்று தமிழ்ப்படம், இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வர இருக்கிறது.

மற்றொன்று ‘பெருச்சாழி ‘என்ற மலையாளப் படம். இந்த படத்தில் மோகன்லாய் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். அமெரிக்காவில் படமாக்கப்பட இருக்கும் இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். அமெரிக்க நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

மோகன்லால் அவர்களின் நகைச்சுவைக்கு நான் மிகப் பெரும் ரசிகன், எனது ‘பெருச்சாழி’க்கு மிகப் பொருத்தமான நடிகராய் அவர் மிளிர்வார், என அருண் வைத்தியநாதன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Read Previous

விக்ரமை வம்புக்கு இழுக்கும் தெலுங்கு ஹீரோ…

Read Next

படப்பிடிப்பில் விபத்து…உயிர் தப்பிய தனுஷ்

Most Popular