ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தை உருவாக்கிய பரத் பாலா தனுஷ், பார்வதி நடிக்கும் ‘மரியான்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக சில காட்சிகளை கடலுக்குள் படமாக்க திட்டமிட்டு தனுஷ், அப்புக்குட்டி நடிக்கும் காட்சிகளை ஒரு படகில் வைத்து படமாக்கி வந்தார் இயக்குனர் பரத் பாலா. அப்போது பலத்த காற்று வீசியதால் தனுஷ் இருந்த படகு கடலில் கவிழ்ந்தது.
பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் உடனே கடலில் குதித்து தனுஷ் மற்றும் அப்புக்குட்டியைக் காப்பாற்றினார்கள். இதனால் படப்பிடிப்பு கொஞ்ச நேரம் தடைபட்டு , பின்னர் தொடர்ந்து நடைபெற்றது.
‘மரியான்’ படத்திற்கு இசை – ஏ.ஆர்.ரகுமான். இவரின் இசையில் தனுஷ் நடிப்பது இதுவே முதல் முறை.