‘பரதேசி’ திரைப்படம் வெளியான ஒரு நாளுக்குள்ளாகவே பலரின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் இந்த படத்தைப் பற்றிப் பாராட்டி வந்தாலும் தமிழ் சினிமாவில் உள்ள மற்றுமொரு திறமையான இயக்குனர் பாராட்டும் போது அதை அனுபவிக்கும் சுகமே தனி.
ரசனை குறைவான சில நகைச்சுவைத் திரைப்படங்கள் நம் மக்களின் ரசனையை மாற்றி விட்டதோ என்ற சூழலில் பரதேசி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் ஆறுதல் அளிக்கிறது என தன் பாராட்டை தெரிவித்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
வெயில், அங்காடித் தெரு, அரவான் போன்ற படங்களை தமிழ் சினிமாவின் தனிப் படங்களாக தடம் பதித்திருக்கும் வசந்த பாலன் பரதேசி படம் பற்றிக் கூறியவை,
“இங்கு தானே நண்பர்களே மகேந்திரன் பாலுமகேந்திரா போன்றவர்கள் தங்கள் புது ரசனையை விதையம் செய்தார்கள்.இந்த விதையை தூவுவதற்கு முன்பு எத்தனை கைகள் அந்த கைகளை கட்டிப் போட்டிருக்கும் என்று கணிக்க தெரியவில்லை.
நடிப்பில் நடிக்கும் அத்தனை பேரையும் பார்க்கத் தேவையில்லை ,யாருடனும் நாம் பேசத் தேவையில்லை, கூன் விழுந்த கிழவி ‘பதேர் பாஞ்சாலி’யை நினைவு படுத்தியபடியே ‘பரதேசி’ படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்தபடியே இருக்கிறாளே…ஆகா அற்புதம் தானே……
அந்த அற்புதத்தை நிகழ்த்த எத்தனை பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டுமோ ? புறவெளியில் நிகழும் அழுத்தங்களா உள்வெளியில் நிகழும் மாற்றங்களா , அழுத்தங்களா தெரியவில்லை.
இத்தனை காமெடித் தோரணங்கள் இடையறாது தொங்கும் சூழலில் இறுக்கமான சோகத்தின் தீராநதியை ஓட விட்டிருக்கும் பரதேசி திரைப்படத்தின் வருகை அதற்கு கிடைத்திருக்கும் இத்தனை வரவேற்பு ஆறுதல்,” என்று கூறியிருக்கிறார்.