அஞ்சலி பற்றிய உண்மைகளை வெளியிடுவேன்… – களஞ்சியம்

karungaliமிழ்த் திரையுலகின் நேற்றைய பரபரப்பு அஞ்சலியின் குற்றச்சாட்டுதான். அவருடைய சித்தி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் அஞ்சலி.

“நான் இதுவரை அம்மா என்று அறிமுகப்படுத்திய பாரதி தேவி, என் அம்மா கிடையாது, அவர் என் சித்திதான். என் அம்மாவும், அப்பாவும் ஆந்திராவில் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று சொன்னால் அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

இதுவரை நான் எனது சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியம் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்து, என்னை கொடுமைப்படுத்தி, நான் சம்பாதித்த பணம், சொத்துக்கள் அனைத்தையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டார்கள்.

நான் இப்போது ஆந்திராவில் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்புவார்கள். என் மீது சிறு கீறல் விழுந்தால் கூட அதற்கு பாரதி தேவியும், களஞ்சியமும்தான் பொறுப்பு, ” என பரபரப்பான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.

anjali-with-her-motherஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இது குறித்து அவர் கூறியதாவது,

“அஞ்சலியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான். அவர் கூறுவது மாபெரும் குற்றச்சாட்டு. என் இமேஜை உடைக்க, அவர் பின்னாடி யாரோ இருந்து அவரை ஆட்டுவிக்கிறார்கள்.

அவரது உயிருக்கு என்னால் ஆபத்து என்று கூறியிருக்கிறார். அவர் இதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்தால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்.

என்னைப் பற்றி அவர் சொன்னது எல்லாம் தவறு என்று அவர் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அஞ்சலி பற்றிய சில உண்மைகளை சொல்வேன், ” என தெரிவித்தார்.

இயக்குனர் களஞ்சியம் , அஞ்சலி இருவரும் இதற்கு முன் கருங்காலி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது களஞ்சியம் இயக்கி வரும் ‘ ஊர் சுற்றி புராணம் ’ என்ற படத்திலும் அஞ்சலி நடித்து வருகிறார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் அஞ்சலி, தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்த ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேத்து’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

Read Previous

‘கோடி’ எல்லாம் வாங்கவில்லை – சிவ கார்த்திகேயன்

Read Next

‘சித்தாள்’ வேலை எல்லாம் பார்த்தேன் – ‘அங்காடித் தெரு’ மகேஷ் உருக்கம்