‘கோடி’ எல்லாம் வாங்கவில்லை – சிவ கார்த்திகேயன்

sivakarthikeyan_00004ம்பளமாக ‘கோடி’ ரூபாய் எல்லாம் வாங்கவில்லை, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதை முன்னிட்டு இன்று பத்திரிகையாளர்களை சிவ கார்த்திகேயன் சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவற்றிலிருந்து சில….

“ ஸ்கிரீன்ல பார்க்கும் போது, நான் நடிக்கிறனா , இல்லையான்னு எனக்கே தெரியலை. இப்போதைக்கு நல்ல நடிகன்னு பேர் வாங்கணும், அவ்வளவுதான். பண்ற காமெடியே திரும்பத் திரும்ப பண்ணக் கூடாது. இதுதான் இப்போதைக்கு ஃபாலோ பண்றன்…

என் நகைச்சுவை நடிப்புக்கு மானசீக குருவா கவுண்டமணி சார், வடிவேல் சார், விவேக் சார் இவங்களை சொல்லலாம். அவங்க நடிப்புல இருந்துதான் நிறைய ‘சுட்டு’ பண்றன்…

திரும்பவும் காமெடி கேரக்டர்ல நடிக்க ஆசையாதான் இருக்கு. ஆனால், கதை சொல்ல வர்ற இயக்குனர்கள் எல்லாம் நம்மள ஹீரோவாதான் பார்க்கிறாங்க.

நெகட்டிவ் கேரக்டர்லலாம் நடிக்க ஆசை இல்லை. ஏன்னா, அப்படி நடிச்சாலும் அது காமெடியாதான் இருக்கும்.

‘எதிர் நீச்சல்’ படத்துல நயன்தாரா கூட டான்ஸ் ஆட ஆசையாதான் இருந்தது. ஆனால், தனுஷ் நானே ஆடிக்கிறேன், நீ ஓரமா நின்னு வேடிக்கை பாருன்னு சொல்லிட்டாரு…அதனால அவங்க கூட நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை.

எனக்குப் பிடிச்ச நடிகை காத்ரீனா கைப். ஹாலிவுட் நடிகைகளைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது.

அடுத்ததா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல சத்யராஜ் சார் கூட சேர்ந்து நடிக்கிறேன். ஸ்ரீ திவ்யா ஹீரோயினா நடிக்கிறாங்க, சூரியும் நடிக்கிறாரு.

நான் ரொம்ப poor star…..கோடி ரூபாய்லாம் சம்பளம் வாங்கறன்னு சும்மா எழுதி விட்டுடறாங்க. இதுவரைக்கும் நடிச்ச படத்துலலாம் கொடுக்கறத வாங்கியிருக்கன். இனிமேல் தான் சம்பளத்தை பத்தி யோசிக்கணும், ” என்றார்.

சும்மா எழுதினத சீக்கிரமே உண்மையாக்கிடுங்க சிவ கார்த்திகேயன்…

Read Previous

“பட வாய்ப்புக்காக எதையும் செய்ய மாட்டேன்” – சனா கான்

Read Next

அஞ்சலி பற்றிய உண்மைகளை வெளியிடுவேன்… – களஞ்சியம்