‘எங்கள் வரிகளை கை தட்ட விடுங்கள்’ – வைரமுத்து

vairamuthu‘பனி விழும் மலர்வனம்’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா, கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவில் வைரமுத்து பேசியதாவது,

“நடிகர், நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் அசையும் பாத்திரங்கள். ஒரு படத்திற்கு அதை விட முக்கியமானது அசையா பாத்திரம், அதாவது லொகேஷன்ஸ். அது அசையாதது. அது, மலையா, பாலைவனமா, கடலா, வயல்வெளியா, புல்வெளியா, அவைகளெல்லாம் பாத்திரங்களாகி விடுகின்றன.

இந்த படத்தில் நான் ஒரு பாட்டெழுதியிருக்கிறேன். “ஊசி மழை விழுந்தாலும் ஒழுகாத காடு, சங்கீதப் பறவைகளின் சந்தோஷக் காடு, சந்திரனும் சூரியனும் ஒளிந்து கொள்ளும் காடு,” என்று எழுதியிருக்கிறேன்.

இசையமைப்பாளர் ரஜினுக்கு ஒரு வார்த்தை. இந்த பாடலை நான் எழுதியிருக்கிறேன். பாடலைக் கேட்கிற போது இவர்கள் கைதட்டவில்லை. நான் சொல்லுகிற போது கைதட்டுகிறார்கள். ஆனால், நீங்கள் நன்றாக இசையமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். வரிகள் கேட்கிற மாதிரி இசையமைத்திருக்கிறீர்கள். எல்லா இசையமைப்பாளர்ளுக்கும் ஒரு வார்த்தை, எங்கள் வரிகளை தயவு செய்து கை தட்ட விடுங்கள்,” என்றார்.

Read Previous

நேரடி மானிய உதவி திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Read Next

ஏமாத்தற காதல்….!

Most Popular