ஏமாத்தற காதல்….!

pongadi neengalum unga kathalum_00011‘போங்கடி நீங்களும் உங்க காதலும்…’ ம்ம்ம்…இதான் படத்தோட தலைப்பு.. காதலைக் கொண்டாடன காலம்லாம் போய், இப்ப ஏமாத்தற காதலுக்கு நாம வந்து நின்னுருக்கோம்னு சொல்ல வர்றாரு இந்த படத்தோட இயக்குனர் எம்.ஏ. ராமகிருஷ்ணன்…

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, படத்தின் மூலமா ஹீரோவா அறிமுகமானவர் ராமகிருஷ்ணன்.

இந்தப் படம் மூலமா இயக்குனராகவும் அறிமுகமாகி ஹீரோவாவும் நடிக்கிறாரு. ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயினா நடிச்ச ஆத்மியா இந்த படத்துல ஹீரோயினா நடிக்கிறாங்க. இன்னொரு ஹீரோயினா காருண்யா நடிக்கிறாங்க.

படத்தைப் பற்றி ராமகிருஷ்ணன் என்ன சொல்றாருன்னா “இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்னன்னு ஒன்னுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க ..பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்றாங்க ? அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’.

எல்லாம் சரிங்க, ஆனால் டைட்டிலைப் பார்த்தால் பொண்ணுங்கள திட்டற மாதிரியும், வம்புக்கு இழுக்கற மாதிரியும் இல்ல இருக்கு…

Read Previous

‘எங்கள் வரிகளை கை தட்ட விடுங்கள்’ – வைரமுத்து

Read Next

கௌதம் மேனன் – சூர்யா இணையும் ‘துருவ நட்சத்திரம்’

Most Popular