திரைக்கு வந்து ‘வெற்றிகரமாக’ ஓடிக் கொண்டிருக்கும் ‘திருமதி தமிழ்’ படத்தை அடுத்து இராஜகுமாரன் புதிதாக இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார்.
ஒரு படத்திற்கு ‘உலக நாயகி’ என்றும் மற்றொரு படத்திற்கு ‘ராவனேஷ்வரி ஐ.பி.எஸ்’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்.
‘உலக நாயகி’ ஒரு காதல் கதை. வெறும் காதல் அல்ல, உச்ச கட்டக் காதல் படமாக இருக்குமாம். இதுக்கு மேல காதலே இருக்க முடியாதுங்கிற அளவுக்கு தீவிரக் காதல் இந்த படத்தில் இருக்கும் என்கிறார் இராஜகுமாரன்.
‘ராவனேஷ்வரி ஐ.பி.எஸ்.’ ஒரு ஆக்ஷன் படம். பவர்ஃபுல்லான இந்த கேரக்டர்ல தேவயானி நடிக்கிறாங்க.
இந்த இரண்டு படத்துக்கான வேலைகளையும் ஆரம்பிச்சிட்ட இராஜகுமாரன், மற்ற விவரங்களை சீக்கிரமே அறிவிக்கிறன்னும் சொல்லியிருக்காரு.