‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு தினேஷ் நடித்து வரும் படம் ‘வாராயோ வெண்ணிலாவே’.
இந்த படத்தை விக்ரமன் இயக்கி வரும் ‘நினைத்தது யாரோ’ படத்தைத் தயாரித்து வரும் அபிஷேக் பிலிம்ஸ் பி.ரமேஷ் மற்றும் இமானுவேல் தயாரித்து வருகிறார்கள்.
கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி நடிக்க, தம்பி ராமய்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை – 28’ படத்திற்கு திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றிய ஆர். சசிதரன் இப்படத்தை இயக்குகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்க பா. விஜய், கபிலன், கானா பாலா பாடல்களை எழுதுகிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர் சசிதரன் கூறியதாவது,
“பணக்கார இளைஞராக வரும் தினேஷ் சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலை செய்ய செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு , எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கதை முடிகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.”
படத்தின் நாயகன் தினேஷ் கூறுகையில், “நல்ல கதை, திரைக்கதை, யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் திரைக்கதையில் உண்டு,” என்றார்.