கர்நாடகாவில் ‘காலா’ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு, நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

இதனால், கர்நாடகாவில் ‘காலா’ படத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி வெளியிட ‘காலா’ தயாரிப்பாளர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

கர்நாடகாவில் ‘காலா’ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகபாப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கர்நாடகாவில் ‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய காவல் துறை பாதுகாப்பை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கர்நாடகாவில் ‘காலா’ படம் வெளியிடும் தியேட்டர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ‘காலா’ படத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையே முந்தைய கர்நாடகா அரசு மதித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதில்லை.

இந்நிலையில், ‘காலா’ விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தற்போதைய குமாரசாமி தலைமையிலான அரசு மதித்து ‘காலா’ படத்திற்கு பாதுகாப்பு வழங்குமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

Read Previous

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்…

Read Next

‘காலா’ பார்க்க சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள்

Most Popular