சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்…

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கடுத்து சிம்பு நடிக்க உள்ள படங்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் 34வது படமாக அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக சிம்புவிற்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அடுத்து சிம்புவின் 35வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார்.

36வது படமாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘விண்ணைத் தாண்டி வருவேன்’ உருவாக உள்ளது.

37வது படமாக வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இயக்குனர் மணிரத்னம் வியக்கும் அளவிற்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு வந்து கலந்து கொண்டு சிம்பு ஆச்சரியப்பட வைத்தாராம்.

இனிமேல், எந்த படப்பிடிப்புக்கும் தாமதமாகச் செல்ல மாட்டேன் என்றும் சிம்பு ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும், அவரைத் தேடி இத்தனை பட வாய்ப்புகள் வருவது ஆச்சரியமானது.

Read Previous

விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ டீசர் – வீடியோ

Read Next

கர்நாடகாவில் ‘காலா’ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு, நீதிமன்றம் உத்தரவு