தனுஷ் முதல் முறையா ஹிந்தியில் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘ராஞ்சனா’ படத்தில் ஹிந்தித் திரையுலகின் மதிப்பு மிக்க நாயகனான அமிதாப் பச்சன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமிதாப்பச்சன் அவருடைய பிளாக்கில் இப்படத்தைப் பாராட்டி எழுதியுள்ளதாவது, “ தனுஷ், சோனம் கபூர் நடித்துள்ள ‘ராஞ்சனா’ ஒரு மகிழ்ச்சியான திரைப்படம். இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. ஏதோ ஒரு சிறிய விதத்திலாவது இப்படத்தில் நான் இல்லாதது என்னை புலம்பவும், வருத்தமடையவும் வைத்துள்ளது.
மிக உயர்ந்த திறமையும், நுணுக்கத் திறனும் கொண்டுள்ள பல புதிய இளைஞர்கள் இன்றைய சினிமாவை உலகிற்கு அளித்து வருகின்றனர்,” என்று அவர் பாராட்டியுள்ளார்.
‘ராஞ்சனா’ திரைப்படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என மொழி மாற்றம் செய்யப்பட்டு நாளை வெளியாக உள்ளது.