ஒரே சமயத்தில் 6 படங்கள் தயாரிக்கும் ஏஜிஎஸ்

ags-entertainment-logoஜீவன், சோனியா அகர்வால் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்த நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.

தொடர்ந்து, ஜெயம் ரவி நடித்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ஆர்யா நடித்த ‘மதராசப் பட்டிணம்’, விஷ்ணு நடித்த ‘பலே பாண்டியா’, நகுல் நடித்த ‘மாசிலாமணி’, ராகவா லாரன்ஸ் நடித்த ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, சேரன் நடித்த ‘யுத்தம் செய்’, நந்தா நடித்த ‘வேலூர் மாவட்டம்’, ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’, ஆர்யா, விஷால் நடித்த ‘அவன் இவன்’, சூர்யா நடித்த ‘மாற்றான்’ ஆகிய படங்களைத் தயாரித்து தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

தற்போது இந்நிறுவனம் ஒரே சமயத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறது.

சந்துரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை’, யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பெயரிடப்படாத படம், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.

ஆறு படமும் அசத்தலா வரட்டும்…

Read Previous

‘சிங்கம் 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Read Next

தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’வைப் பாராட்டிய அமிதாப்